ஆளே மாறிப்போன விஜய்சேதுபதி... அசத்தலான நியூ லுக்!

விஜய்சேதுபதி
விஜய்சேதுபதி

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதில் நடிகர் விஜய்சேதுபதி உடல் இளைத்து ஆளே மாறி புதிய லுக்கில் உள்ளது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் இருப்பதால் வில்லனுக்கு போதிய முக்கியத்துவம் இல்லை எனக் கூறி இன்னும் சில வருடங்களுக்கு வில்லனாக நடிக்கப் போவதில்லை என்று அறிவித்தார் விஜய்சேதுபதி. இந்த நிலையில் தற்போது மீண்டும் ஹீரோவாக நடிக்க உள்ளார். மிஷ்கினுடன் அவர் இணைந்துள்ள புதிய படத்தின் பூஜை இன்று போடப்பட்டுள்ளது. படப்பிடிப்பும் தொடங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் படத்திற்கு 'ட்ரெயின்' எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த கதை ஒரு ரயில் பயணத்தில் நடைபெறும் அதிரடி திகில் நிறைந்த கதை என கூறப்படுகிறது.

விஜய்சேதுபதி
விஜய்சேதுபதி

இத்திரைப்படத்திற்காக விஜய் சேதுபதி வித்தியாசமான தோற்றத்தில் உடல் இளைத்து காணப்படுகிறார். மேலும் அவரது தோற்றத்திற்காக நிறைய மாற்றங்களைச் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். படத்தில் டிம்பிள் ஹயாதி அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுமட்டுமல்லாது, இப்படத்தில் ஈரா தயானந்த், நாசர், வினய் ராய், பாவனா, சம்பத் ராஜ், பப்லு பிருத்விராஜ், கே.எஸ்.ரவிக்குமார், யூகி சேது, கணேஷ் வெங்கட்ராமன், கனிஹா, தியா சீதிபள்ளி, சிங்கம் புலி, ஸ்ரீரஞ்சனி, அஜய் ரத்னம், திரிகுன் அருண், ராச்சல் ரபேக்கா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

விஜய்சேதுபதி
விஜய்சேதுபதி

இயக்குநர் மிஷ்கின் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 'ட்ரெயின்' படத்தின் படப்பிடிப்பு இன்று காலை பூஜையுடன் தொடங்கியது. பூஜையில் இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in