இந்த ஒரு விஷயத்துக்காகதான் 13 வருடம் காத்திருந்தேன்... நடிகர் விதார்த் நெகிழ்ச்சி!

நடிகர் விதார்த்
நடிகர் விதார்த்

கடந்த 13 வருடங்களாகக் காத்திருந்தது இப்போதுதான் நடந்திருக்கிறது என நடிகர் விதார்த் நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.

’இறுகப்பற்று’ படத்தின் வெற்றி விழாவில் நடிகர் விதார்த், அபர்ணதி, தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு எனப் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இதில் நடிகர் விதார்த் பேசும்போது, `மைனா’ படம் ரிலீஸான போது உங்களை எல்லாம் சந்தித்து அந்த வெற்றியை பகிர்ந்து கொண்டேன். அதன்பிறகு நான் நடித்த ஒவ்வொரு படத்திற்கும் அதன் தயாரிப்பாளரே வந்து இது வெற்றிப்படம் என சொல்வார்கள் என எதிர்பார்த்தேன். 13 வருடம் கழித்து இந்த படத்தில் அது நடந்திருக்கிறது.

'இறுகப்பற்று’ பட விழா
'இறுகப்பற்று’ பட விழா

படம் வெளியான பிறகு தொடர்ந்து நிறைய தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. ஒவ்வொரு அழைப்பையும் பேசி முடிக்க ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. இப்படி ஒரு படத்தின் ஒரு அங்கமாக நானும் இருப்பது எனக்கு பெருமை. கடந்த இரண்டு நாட்களாக கோயம்புத்தூரில் ஆயுர்வேத டயட்டில் இருந்து வந்தேன். இப்படி ஒரு நன்றி சொல்லும் சந்திப்பு இருக்கிறது என தகவல் வந்தது. இந்த தருணத்திற்காக தானே காத்திருந்தேன். உடனே கோவையில் இருந்து கிளம்பி வந்தேன்” என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in