சாய்பல்லவியுடன் நடிக்கும் விதார்த்?

சாய்பல்லவி
சாய்பல்லவிசாய்பல்லவியுடன் நடிக்கும் விதார்த்?

சாய்பல்லவி நடிக்கும் புதிய படம் ஒன்றில் விதார்த் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘கார்கி’ படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து நடிகை சாய்பல்லவி கதைத்தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். கமர்ஷியல் படங்கள் மட்டும் என்றில்லாமல், கதைக்கும் தன்னுடைய கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் இருக்கும்படியான படங்களுக்கு மட்டும் இப்போதைக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறார் சாய்பல்லவி. அந்த வகையில், தற்போது சிவகார்த்திகேயன் ‘மாவீரன்’ படத்திற்குப் பிறகு ‘ரங்கூன்’ பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாகிறார் சாய் பல்லவி.

அதற்கடுத்து மீண்டும் ஒரு ஹீரோயின் செண்ட்ரிக் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அந்த கதையில்தான் நடிகர் விதார்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது என்பது கூடுதல் செய்தி. விரைவில் இதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in