சிகிச்சைப் பெற்று வந்த நடிகர் வெங்கல் ராவ் வீடு திரும்பினார்!

சிகிச்சைப் பெற்று வந்த நடிகர் வெங்கல் ராவ் வீடு திரும்பினார்!

சிறுநீரகப் பிரச்சினைக்காக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த காமெடி நடிகர் வெங்கல் ராவ் வீடு திரும்பினார்.

தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்தவர் வெங்கல் ராவ். ஆந்திராவை சேர்ந்த இவர் தமிழில், பல படங்களில் காமெடி காட்சிகளில் நடித்துள்ளார். வடிவேலுவுடன் இணைந்து இவர் நடித்துள்ள பல காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிக்கப்படுகின்றன. வடிவேலு சில வருடங்கள் நடிக்காமல் இருந்ததால், இவருக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் இவர் வறுமையில் வாடியதாக சில மாதங்களுக்கு முன் செய்திகள் வெளியாகி இருந்தன.

எலி படத்தில் வெங்கல் ராவ், வடிவேலு, பவா லட்சுமணன்
எலி படத்தில் வெங்கல் ராவ், வடிவேலு, பவா லட்சுமணன்

இந்நிலையில், இவர் சிறுநீரகப் பிரச்சினை காரணமாக விஜய வாடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் விரைவில் நலம்பெற வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

இப்போது அவர் குணமடைந்து வீட்டுக்குத் திரும்பியுள்ளார். இதுபற்றி அவர் தரப்பில் விசாரித்தபோது, ``சிகிச்சை முடிந்து அவர் வீட்டுக்குத் திரும்பிவிட்டார். இப்போது நலமாக இருக்கிறார். அவர் குடும்பத்தினர் அவரை கவனித்து வருகின்றனர்'' என்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in