‘உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள்!’ - தொற்றுக்குள்ளான நடிகை அட்வைஸ்

‘உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள்!’ - தொற்றுக்குள்ளான நடிகை அட்வைஸ்

தமிழில், ‘மதராஸி’, ‘சக்கரக்கட்டி’, ‘காளை’, ‘காஞ்சனா 3’, ‘பரதேசி' உள்பட பல படங்களில் நடித்திருப்பவர் வேதிகா. தற்போது, யோகிபாபு நாயகனாக நடிக்கும் 'கஜானா' படத்தில் நடித்து வருகிறார். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள இவர், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதுபற்றிய தகவலைத் தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்திருக்கும் வேதிகா, கரோனா விஷயத்தில் அலட்சியம் கூடாது என்றும் எச்சரித்திருக்கிறார்.

தனது பதிவில், ‘துரதிர்ஷ்டவசமாக, முதன்முறையாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். எனக்கு இரண்டு நாட்களாகக் கடுமையான காய்ச்சல். லேசான அறிகுறிகளைத் தயவுசெய்து குறைத்து மதிப்பிடாதீர்கள். பயங்கரமான உடல் வலி மற்றும் அதிகக் காய்ச்சலுடன் உடல்நலன் பாதிக்கப்பட்டிருப்பது சரியானதல்ல.

ஏற்கெனவே தொற்று பாதித்திருந்தால் மீண்டும் தொற்று பாதிக்காது என நினைக்க வேண்டாம். ஒரு மாதம் முதல் இரண்டு மாதங்களுக்குள் மீண்டும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை நான் அறிவேன். அதனால் உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள். தொற்று வந்தபின் வருந்துவதைவிட, பாதுகாப்பாக இருப்பது நல்லது. நீங்கள் ஒருவரை அல்லது நூறு பேரைச் சந்தித்தாலும் முகக்கவசம் அணியுங்கள். நான் இப்போது நன்றாக இருக்கிறேன். விரைவில் இதிலிருந்து குணமாகிவிடுவேன். பாதுகாப்பாக இருங்கள்’ என வேதிகா கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in