பிரம்மாண்ட ஏற்பாடு… சிரஞ்சீவி தம்பி மகன் நடிகர் வருண் தேஜின் திருமணம்!

பிரம்மாண்ட ஏற்பாடு… சிரஞ்சீவி தம்பி மகன் நடிகர் வருண் தேஜின் திருமணம்!

நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகனும், நடிகருமான வருண் தேஜ் மற்றும் நடிகை லாவண்யா திரிபாதியின் திருமணம் குறித்த செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் வருண் தேஜும், நடிகை லாவண்யாவும் 'மிஸ்டர் சித்ரா' என்ற படத்தில் நடித்த போது காதலிக்க தொடங்கினர். படப்பிடிப்பு இத்தாலியில் நடைபெற்றது. இருவரும் ரகசியமாக டேட்டிங் செய்து வந்த நிலையில், விஷயம் வெளியே தெரிய தொடங்கியது.

இந்நிலையில், இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். அண்மையில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இருவருக்கும் வரும் 1-ம் தேதி இத்தாலியில் திருமணம் நடைபெற உள்ளது.

அவர்கள் இத்தாலியில் காதலிக்க தொடங்கியதால் சென்டிமென்டாக அங்கேயே திருமணம் செய்து கொள்ள உள்ளனர். திருமணத்தில் வருண் தேஜ் மற்றும் லாவண்யா குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளனர்.

நவம்பர் 5-ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள என் கன்வென்ஷன் சென்டரில் வரவேற்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில், இருவரின் வரவேற்பு அழைப்பிதழ் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதில், சிரஞ்சீவி, பவன் கல்யாண், ராம்சரண் ஆகியோரின் பெயர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டன.

வருண் தேஜ் மற்றும் லாவண்யாவின் திருமணம் மற்றும் வரவேற்பு ஆடைகளை பாலிவுட்டை சேர்ந்த நட்சத்திர ஆடை வடிவமைப்பாளர் மணீஷ் மல்ஹோத்ரா டிசைன் செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே வரும் 5-ம் தேதி நட்சத்திர பட்டாளமே ஹைதராபாத்தில் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in