நகைச்சுவை நடிகர் போண்டா மணிக்கு வடிவேலு ஏன் உதவவில்லை?

நகைச்சுவை நடிகர் போண்டா மணிக்கு வடிவேலு ஏன் உதவவில்லை?

நகைச்சுவை நடிகர் வடிவேலு உடல்நிலை சரியில்லாத போண்டா மணிக்கு இன்னும் உதவ முன்வரவில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நகைச்சுவை நடிகர் போண்டா மணி கிட்னி செயலிழப்புக் காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். நகைச்சுவை நடிகராகப் பல படங்கள் நடித்திருந்தாலும் மனைவி, மகள், மகன் என குடும்பம் நடத்துவது சிரமமான நிலையில் இருப்பதாகவும் சிகிச்சைக்கும் போதியப் பணம் இல்லை என்பதையும் வருத்தத்துடன் ஊடகங்கள் வாயிலாகத் தெரிவித்து இருந்தார். இதனை அடுத்து, நகைச்சுவை நடிகர் போண்டாமணிக்கு நடிகர் தனுஷ், விஜய் சேதுபதி, தமிழக அரசு, டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட பலரும் அவரது மருத்துவ செலவிற்காக உதவி செய்தனர்.

ஆனால் நடிகர் வடிவேலுவிடமிருந்து எந்த ஒரு உதவியும் தனக்கு கிடைக்கவில்லை என்பதால் போண்டாமணி தனக்கு வருத்தமாக உள்ளது என்றும், தான் வெளியில் தெரிவதற்கு வடிவேலுவுடன் இணைந்து நடித்தப் படங்களும் ஒரு காரணம் என்பதையும் தெரிவித்து இருந்தார்.


இந்நிலையில், அண்மையில் நடிகர் வடிவேலுவிடம் ஒரு பேட்டியில் போண்டாமணிக்கு ’நீங்கள் உதவி செய்வீர்களா?’ என கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘நான் உதவாமல் வேறு யார் அவருக்கு உதவுவார்? கண்டிப்பாக அவருக்கு நான் உதவி செய்வேன்’ என பதில் அளித்திருந்தார். இருந்தாலும் தற்போது வரை நடிகர் வடிவேலு, போண்டாமணிக்கு உதவவில்லை என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in