இதுவரை பார்த்திராத கதாபாத்திரத்தில் நடிக்கும் வடிவேலு: ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

இதுவரை பார்த்திராத கதாபாத்திரத்தில் நடிக்கும் வடிவேலு: ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

நடிகர் வடிவேலு முதன் முறையாக இதுவரை ரசிகர்கள் அவரைப் பார்த்திராத ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

’என் தங்கை கல்யாணி’, ‘என் ராசாவின் மனதினிலே’ ஆகிய படங்களில் நடிக்க ஆரம்பித்து கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கும் மேலாகத் தனது திரையுலகப் பயணத்தைத் நகைச்சுவை நடிகராகவும், கதாநாயகனாகவும், பாடகராகவும் தொடர்ந்து வருகிறார் நடிகர் வடிவேலு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பக்கூடிய நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாது, குணச்சித்திர நடிகராகவும் தன் நடிப்புத் திறமையைப் பல படங்களில் நிரூபித்தவர் நடிகர் வடிவேலு.

பல்வேறு நகைச்சுவைக் கதாபாத்திரங்கள் மற்றும் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் வடிவேலு நடித்திருந்தாலும் முழுக்க முழுக்க காதல் படங்களிலோ அல்லது வில்லனாகவோ இதுவரை அவர் நடித்தது கிடையாது.

வடிவேலு
வடிவேலு

இப்போது அதற்கான வாய்ப்பு அவரைத் தேடி வந்துள்ளது. ஜிவி பிரகாஷ் அடுத்து, ‘தில்லுக்கு துட்டு’ படத்தை இயக்கிய ராம்பாலா இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தில்தான் ஜிவி பிரகாஷூக்கு வில்லனாக நடிக்க வடிவேலுவிடம் கேட்டிருக்கிறார்கள். முதலில் தயங்கினாலும் இயக்குநருக்காக நடிகர் வடிவேலு வில்லனாக நடிக்க சம்மதித்து இருக்கிறார். வில்லனாக வடிவேலு என்ற செய்தி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு படக்குழு தரப்பில் இருந்து எதிர்ப்பார்க்கலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in