பெண் தூய்மைப் பணியாளரை நெகிழவைத்த நடிகர் வடிவேலு!

பெண் தூய்மைப் பணியாளரை நெகிழவைத்த நடிகர் வடிவேலு!

பண்ணாரி அம்மன் கோயிலில் தரிசனம் செய்ய வந்த நடிகர் வடிவேலு அங்கிருந்த பெண் தூய்மைப் பணியாளருடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், மைசூரில் நடந்த படப்பிடிப்பில் ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு நடிகர் வடிவேலு நேற்று மாலை கோவைக்கு காரில் சென்று கொண்டு இருந்தார். திடீரென ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயிலுக்கு நடிகர் வடிவேலு வருகை தந்தார். அவரை கோயில் நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் பண்ணாரி அம்மனை தரிசனம் செய்த வடிவேலு, கோயிலில் உள்ள அலுவலகத்தில் சிறிது நேரம் உட்கார்ந்து இருந்தார். வடிவேலு வருகை குறித்து பக்தர்களுக்கு தெரிய வரவே அவரை சூழ்ந்து கொண்டனர். பின்னர், அவருடன் பக்தர்கள் பலர் புகைப்படம் எடுத்துக்கொண்டதோடு, சிலர் செல்ஃபி எடுத்தனர்.

அப்போது, கோயிலில் துப்புரவு வேைலயில் ஈடுபட்டு கொண்டிருந்த பெண் ஒருவரை வடிவேலு திடீரென அழைத்தார். அருகில் வந்த அவர், வடிவேலுவின் காலில் விழுந்து வணங்கினார். அந்த பெண்ணை தூக்கிவிட்ட வடிவேலு, நன்றாக இருங்கள் என்று வாழ்த்தியதோடு, அந்த பெண்ணுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். வடிவேலு தன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதால் அந்த பெண் நெகிழ்ச்சியடைந்தார். பின்னர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு வடிவேலு அங்கிருந்து காரில் புறப்பட்டு கோவை சென்றார். வடிவேலு வருகையால் பண்ணாரி அம்மன் கோயிலில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in