மாரி செல்வராஜ் கவிதைத் தொகுப்பை வெளியிட்ட வடிவேலு

மாரி செல்வராஜ் கவிதைத் தொகுப்பை வெளியிட்ட வடிவேலு

இயக்குநர் மாரி செல்வராஜின் கவிதைத் தொகுப்பை நடிகர் வடிவேலு வெளியிட்டார்.

பரியேறும்பெருமாள், கர்ணன் படங்களை இயக்கியவர் மாரி செல்வராஜ். இவர் இப்போது, ’மாமன்னன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில், உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கிறார். நாயகியாக, கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மலையாள நடிகர் பகத் ஃபாசில், வடிவேலு உட்பட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார்.

இந்தப் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். இயக்குநர் மாரி செல்வராஜ், தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள், மறக்கவே நினைக்கிறேன் என்ற இரு நூல்களை ஏற்கெனவே எழுதியுள்ளார். இந்த நூல்கள், தமிழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நூல்கள் ஆகும்.

இதைத் தொடர்ந்து மூன்றாவது நூலாக “உச்சினியென்பது” என்ற கவிதை தொகுப்பை வெளியிட்டுள்ளார். கொம்பு பதிப்பகத்தின் வெளியீடாக இந்த தொகுப்பு வந்திருக்கிறது. இந்த நூலை மாரி செல்வராஜின் மாமன்னன் படத்தில் நடித்து வரும் வடிவேலு சமீபத்தில் வெளியிட்டார்.

Related Stories

No stories found.