உதயநிதிக்கு கேக் ஊட்டி பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் வடிவேலு: கலகலப்பான `மாமன்னன்' படப்பிடிப்பு

உதயநிதிக்கு கேக் ஊட்டி பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் வடிவேலு: கலகலப்பான `மாமன்னன்' படப்பிடிப்பு

`மாமன்னன்' படக்குழுவினருடன் தனது பிறந்தநாளை நடிகர் வடிவேலு கொண்டாடினார். நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு கேக் ஊட்டி தனது மகிழ்ச்சியை வடிவேலு வெளிப்படுத்தினார்.

‘நெஞ்சுக்கு நீதி’ படத்தைத் தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் ‘மாமன்னன்’ படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகிறார். நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றார். நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போது சேலத்தில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் வடிவேலு தனது பிறந்தநாளை இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் எம்.செண்பகமூர்த்தி, லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைமை அதிகாரி ஜி.கே.எம்.தமிழ் குமரன் மற்றும் மாமன்னன் படக்குழுவினருடன் இணைந்து மகிழ்ச்சியுடன் கேக் வெட்டி கொண்டாடினார். அனைவரும் நடிகர் வடிவேலுவிற்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். வடிவேலுவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தால் படப்பிடிப்பு தளம் கலகலப்பானது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in