நடிகர் வடிவேலுக்கு கெளரவ டாக்டர் பட்டம்!

கெளரவ டாக்டர் பட்டத்துடன் நடிகர் வடிவேலு
கெளரவ டாக்டர் பட்டத்துடன் நடிகர் வடிவேலு நடிகர் வடிவேலுக்கு கெளரவ டாக்டர் பட்டம்!

வைகைப்புயல் நடிகர் வடிவேலுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் கெளரவப்படுத்தியுள்ளது.

தனது நகைச்சுவையால் ரசிகர்களை கவர்ந்திருத்தவர் வைகைப்புயல் வடிவேலு. நீண்ட இடைவேளைக்கு பிறகு வடிவேலு நாயகனாக நடித்திருந்த 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' அவரது கம்பேக் படமாக இருக்கும் என ரசிகர்கள் நம்பினார்கள். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்துள்ள `மாமன்னன்' படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ள வடிவேலு, சந்திரமுகி படத்தின் 2-ம் பாகத்தில் தற்போது நடித்துவருகிறார்.

இந்த நிலையில் உயர் நீதிமன்ற நீதியரசர் வள்ளிநாயகம் தலைமையின் கீழ் இயங்கும் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலுவுக்கு சமூகத்தின் உயரிய விருதான கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. அவருக்கு பொழுதுபோக்கு பிரிவின் கீழ் இந்த பட்டம் வழங்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in