கெத்தாக தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொன்ன சூர்யா! (வீடியோ)

கெத்தாக தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொன்ன சூர்யா! (வீடியோ)

ஒரு கிராமத்தில் காளையை கையில் பிடித்தப்படி அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்தை கெத்தாக கூறியுள்ளார் நடிகர் சூர்யா. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் தமிழ் புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அம்பேத்கரின் பிறந்தநாளும் இன்று என்பதால் இரண்டு கொண்டாட்டங்களும் நடந்து வருகின்றன. பல்வேறு தலைவர்கள், திரைவுலக பிரபலங்கள் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் சூர்யா வித்தியாசமான முறையில் தமிழ் புத்தாண்டு வாழ்த்தை தமிழக மக்களுக்கு தெரிவித்துள்ளார். சாலையின் இருபுறமும் பச்சை பசேல் என்று மரங்கள் இருக்கும் இடத்தில் உள்ள சாலையில் காளை ஒன்றை கையில் பிடித்தபடி வரும் நடிகர் சூர்யா, இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!! என்று கெத்தாக கூறிவிட்டு செல்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

Related Stories

No stories found.