சம்பளம் வாங்காமல் பாலிவுட் படத்தில் நடித்த நடிகர் சூர்யா!

சம்பளம் வாங்காமல் பாலிவுட் படத்தில்  நடித்த நடிகர் சூர்யா!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவர். கமல்ஹாசன் அழைப்பை ஏற்று சில நிமிடங்கள் மட்டுமே தோன்றும் ஒரு ரோலில் ‘விக்ரம்’ படத்தில் நடித்து இருந்தார்.

‘ரோலக்ஸ்’ என்ற அவரது கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சூர்யாவுக்கு கமல்ஹாசன் விலை உயர்ந்த ரோலக்ஸ் வாட்ச்சை பரிசாக வழங்கினார். அந்த வாட்ச் கமல் ஆசையாக முதலில் வாங்கி பாதுகாத்தது என்று கூறப்படுகிறது. சூர்யா இந்த படத்தில் நடிப்பதற்கு சம்பளம் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ஒரு பாலிவுட் படத்தில் சூர்யா ஒரு ருபாய் கூட சம்பளம் வாங்காமல் நடித்து இருக்கிறார். மாதவன் நடித்து இருக்கும் ‘ராக்கெட்ரி’ படத்தில் தான் சூர்யா சம்பளம் வாங்காமல் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். அதே படத்தில் ஷாருக் கானும் கெஸ்ட் ரோலில் தோன்றியிருக்கிறார். அவரும் சம்பளம் வாங்கவில்லை.

மும்பையில் நடந்த ஷூட்டிங்கிற்கு சென்று வர விமான டிக்கெட் கட்டணம் கூட சூர்யா வாங்கவில்லை. கேரவன், உதவியாளர் என எதற்காகவும் சூர்யா பணம் வாங்காமல் நடித்து கொடுத்தார் என மாதவன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்று படமான ‘ராக்கெட்ரி’ ஜூலை 1-ம் தேதி ரிலீஸாகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in