`கமல் அண்ணா எப்படி சொல்றது?’- நடிகர் சூர்யா நெகிழ்ச்சி

`கமல் அண்ணா எப்படி சொல்றது?’- நடிகர் சூர்யா நெகிழ்ச்சி

’விக்ரம்’ படத்தில் கமல்ஹாசனுடன் நடித்துள்ள நடிகர் சூர்யா, நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம், ’விக்ரம்’. விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், செம்பன் வினோத், நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி உள்பட பலர் நடித்துள்ளனர். சூர்யா, கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பான் இந்தியா முறையில், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம், நேற்று (ஜூன் 3) வெளியானது.

நான்கு வருடத்துக்குப் பிறகு கமல் நடித்துள்ள படம் என்பதால் படத்துக்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் படம் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டது.

இந்நிலையில் நடிகர் சூர்யா, கமலுடன் நடிக்க வேண்டும் என்ற தனது கனவு நனவாகி இருப்பதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இதுபற்றி தனது சமூக வலைதள பக்கத்தில், ’அன்புள்ள கமல்ஹாசன் அண்ணா, எப்படி சொல்றது? உங்களுடன் நடிக்க வேண்டும் என்ற என் கனவு நனவாகி இருக்கிறது. இந்த வாய்ப்பை தந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு நன்றி. அனைவரின் ஆதரவையும் அன்பையும் கண்டு திகைக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in