பாலிவுட்டில் மாஸ்டர் பிளான் போடும் சூர்யா...வைரல் புகைப்படங்கள்!

சூர்யாவுடன் அமிதாப் அக்‌ஷய்குமார்
சூர்யாவுடன் அமிதாப் அக்‌ஷய்குமார்

நடிகர்கள் அமிதாபச்சன் அக்ஷய் குமார் ஆகியோருடன் கருப்பு நிற கோட் சூட்டில் நடிகர் சூர்யா இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது. இதனையடுத்து, பாலிவுட்டில் அவர் மாஸ் எண்ட்ரி கொடுக்கத் திட்டமா என ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

நடிகர் சூர்யா தற்பொழுது மும்பையில் தனது பிள்ளைகளின் படிப்புக்காகவும் ஜோதிகாவின் குடும்பத்திற்காகவும் வசித்து வருகிறார். மும்பையில் இவர்கள் சொந்த வீடு வாங்கி செட்டில் ஆகிவிட்டதாக சொல்லப்படும் நிலையில், சூர்யா தமிழிலும் இந்திய சில படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். இப்படியான சூழலில் தான் நேற்று முன்தினம் அவர் நடிகர் அமீர்கானின் மகள் இரா கானின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கருப்பு நிற கோட் சூட்டுடன் கலந்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலானது. இதோடு, நடிகர்கள் அமிதாப்பச்சன், அக்‌ஷய்குமார் உடன் சூர்யா சிரித்து பேசிக்கொண்டிருக்கும் படியான புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆனது. தமிழை போலவே இந்த இந்தியிலும் மாஸாக படங்கள் நடிக்க சூர்யா திட்டம் வைத்துள்ளார் எனவும் தனது மார்க்கெட்டை பாலிவுட்டில் அவர் நிலைநிறுத்த போகிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

விரைவில் இந்தியாவில் தொடங்க உள்ள 'இந்தியன் ஸ்ட்ரீட் பிரிமியர் லீக்' (ISPL) நிகழ்ச்சியின் முன்னோட்டத்திற்காக இவர்கள் மூவரும் ஒன்றிணைந்துள்ளனர். இதனுடைய துவக்கு விழா வருகிற மார்ச் 2 முதல் 9ஆம் தேதி வரை மும்பையில் நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதற்காக ஒரு விளம்பரப் படத்தில் நடிக்கவே நடிகர் சூர்யா, அமிதா பச்சன் மற்றும் அக்‌ஷய்குமார் ஆகிய மூவரும் ஒரே இடத்தில் ஒன்றுகூடி உள்ளனர். சமீபத்தில், இந்த ISPL -ன் சென்னை அணியை நடிகர் சூர்யா வாங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in