மீண்டும் ‘சூரரைப்போற்று’ கூட்டணி... ’சூர்யா43’ டைட்டில் இதுவா?

சூர்யா, சுதா கொங்கரா, ஜிவி பிரகாஷ்...
சூர்யா, சுதா கொங்கரா, ஜிவி பிரகாஷ்...

'கங்குவா’ படத்தில் பிஸியாக நடித்து வரும் நடிகர் சூர்யாவின் 43வது படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். சரித்திர கதையாக உருவாகி வரும் இந்தப் படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் நடிகர் சூர்யாவின் பிறந்தநாளன்று வெளியாகி கவனத்தை ஈர்த்தது. இந்தப் படத்திற்குப் பிறகு நடிகர் சூர்யாவின் 43வது படம் பற்றி பல செய்திகள் வெளியானது. ‘சூரரைப் போற்று’ படத்தின் வெற்றிக்குப் பிறகு சுதா கொங்கரா மற்றும் ஜிவி பிரகாஷூடன் மீண்டும் இணைவேன் என சூர்யா முன்பு சொல்லியிருந்த நிலையில் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

இது குறித்து நடிகர் சூர்யா தனது சமூகவலைதளப் பக்கத்தில், சுதா கொங்கரா இயக்கத்தில் இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷின் 100வது படத்தில் இணைவது மகிழ்ச்சி எனக் கூறியுள்ளார். மேலும், முன்பே கேள்விப்பட்டபடி இந்தப் படத்தில் நஸ்ரியா, துல்கர் சல்மான், தமன்னாவின் காதலர் விஜய் வர்மா ஆகியோர் நடிப்பதையும் சூர்யா உறுதி செய்துள்ளார். விஜய் வர்மா சூர்யாவுக்கு வில்லனாக நடிக்கிறார். படத்தின் தலைப்பின் ஒருபகுதியாக ’புறநானூறு’ இருக்கும் என இந்த புரோமோ வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. எனவே வலுவான ஒரு கதையாக இருக்கும் என்பதையும் இந்த கிளிம்ப்ஸ் காட்டுகிறது. படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in