18 வருடங்கள் கழித்து... மீண்டும் இணைந்து நடிக்கும் சூர்யா- ஜோதிகா ஜோடி!

சூர்யா- ஜோதிகா
சூர்யா- ஜோதிகா

சூர்யா- ஜோதிகா இருவரும் கிட்டத்தட்ட 18 வருடங்கள் கழித்து திரையில் ஒன்று சேர்ந்து நடிக்க இருக்கிறார்கள். இந்த செய்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. விரைவில், இதுகுறித்தான அதிகாரபூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

கெளதம் வாசுதேவ் மேனன், சூர்யா, ஜோதிகா
கெளதம் வாசுதேவ் மேனன், சூர்யா, ஜோதிகா

’சில்லுன்னு ஒரு காதல்’ படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட 18 வருடங்கள் கழித்து சூர்யா- ஜோதிகா இருவரும் இணைந்து காதல் கதை ஒன்றில் நடிக்க இருக்கிறார்கள். இந்தப் படத்தை இயக்குநர்கள் ஹலிதா ஷமீம் மற்றும் அஞ்சலி மேனன் இருவரும் இணைந்து இயக்குவார்கள் எனத் தெரிகிறது.

திரையில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஜோடிகளில் சூர்யா- ஜோதிகா ஜோடியும் ஒன்று. இருவரும் இணைந்து ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’, ’உயிரிலே கலந்தது’, ’காக்க காக்க’, ’பேரழகன்’, ’மாயாவி’ உள்ளிட்ட பல படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். மேலும், பல விளம்பர படங்களிலும் இணைந்து நடித்துள்ளனர்.

சூர்யா-ஜோதிகா...
சூர்யா-ஜோதிகா...

’காக்க காக்க’ படத்துக்கு முன்பே இருவருக்குள்ளும் இருந்த நட்பு காதலாக மாறத் தொடங்கி இருந்தது. பின்பு இந்த ஜோடி 2006-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்திற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு இருவரும் இணைந்து நடித்த ‘சில்லுன்னு ஒரு காதல்’ படம் வெளியானது. அதன் பிறகு இருவரும் சில விளம்பர படங்களில் மட்டும் இணைந்து நடித்தனரே தவிர படங்களில் ஜோடி சேரவில்லை.

இப்போது சூர்யாவும், ஜோதிகாவும் தனித்தனியாக தங்களது கரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் மீண்டும் இணைந்து படத்தில் நடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாகவும் இருக்கிறது. அது விரைவில் நிறைவேறும் என தற்போது செய்திகள் வெளியாகி வருகிறது. இதுகுறித்து விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பை எதிர்ப்பார்க்கலாம்.

ஹலிதா ஷமீம் இயக்கத்தில் கடந்த 2019-ல் வெளிவந்த ‘சில்லுக்கருப்பட்டி’ படத்தை சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட்ஸ் டிஸ்ட்ரிபியூட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...    

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்... பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்!

‘ஜப்பான், பிலிப்பைன்ஸில் சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு... சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சரிந்தன!

கேளிக்கை விடுதியில் பயங்கர தீ விபத்து... 29 பேர் எரிந்து உயிரிழந்த பரிதாபம்!

வள்ளி கும்மி நடனமாடி வாக்கு சேகரித்த அண்ணாமலை... கோவை பரப்புரையில் குதூகலம்!

தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ரூ.4 கோடி பறிமுதல்... வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in