சிறுவர்கள் முன் நிர்வாணமாக நின்ற வழக்கு: ’கும்கி’ நடிகருக்கு ஜாமீன்

சிறுவர்கள் முன் நிர்வாணமாக நின்ற வழக்கு: ’கும்கி’ நடிகருக்கு ஜாமீன்

சிறுவர்கள் முன் நிர்வாணமாக நின்ற வழக்கில், வில்லன் நடிகருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

பிரபல மலையாள வில்லன் நடிகர் ஸ்ரீஜித் ரவி. இவர் தமிழில், ’வேட்டை’, 'மதயானைக் கூட்டம்', 'கும்கி', ’கதகளி’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். கேரள மாநிலம் திருச்சூரில் சிறுவர்கள் முன்பு நிர்வாணமாக நின்ற வழக்கில், சில நாட்களுக்கு முன், போக்சோ சட்டத்தின் கீழ் இவர் கைது செய்யப்பட்டார். இவருக்கு திருச்சூர் நீதிமன்றம் ஜாமீன் அளிக்க மறுத்துவிட்டது.

பின்னர், நடிகர் ஸ்ரீஜித் ரவி தரப்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், அவருக்கு மனநல பாதிப்பு இருப்பதாகவும் அதற்கு சிகிச்சை எடுத்து வருவதாகவும் அதிக நாட்கள் சிறையில் இருந்ததால் அது மனநிலையை இன்னும் பாதிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், சிகிச்சை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் இதுபோன்ற குற்றம் மீண்டும் நடந்தால் ஜாமீன் உடனடியாக ரத்து செய்யப்படும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அவருக்கு ஜாமீன் வழங்கியது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in