`டான்' பட கொரியன் வசனம் பேசி அசத்திய நடிகர் சூரி: மகிழ்ச்சியில் கூச்சலிட்ட மாணவிகள்!

'டான்' பட வசனம் பேசிய நடிகர் சூரி
'டான்' பட வசனம் பேசிய நடிகர் சூரி

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உணவகத்தை திறந்து வைப்பதற்காக வந்த நடிகர் சூரி செவிலியர்கள் பயிற்சி பள்ளி மாணவிகளிடம் 'டான்' படத்தில் வரும் கொரியன் மொழி வசனம் பேசி அசத்தியுள்ளார்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் இன்று புதிதாக அம்மன் உணவகத்தை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், உணவகத்தின் உரிமையாளரும், பிரபல நடிகருமான சூரி கலந்துகொண்டார்.

இந்நிலையில், மருத்துவமனை வளாகத்தில் உள்ள செவிலியர் பயிற்சி பள்ளியில். நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி இணைந்து நடித்து வெளியான 'டான்' திரைப்படத்தில் வரக்கூடிய "அப்பா…" என்று கொரியன் மொழி வசனத்தை கல்லூரி மாணவிகளிடம் பேசி அசத்தினார். அவர் வசனம் பேசுவதை ரசித்த மாணவிகள் உணர்ச்சிவசப்பட்டு, மகிழ்ச்சியில் கூச்சலிட்டனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in