'விடுதலை' தந்த உற்சாகம்: ஓடிடியிலும் தடம் பதிக்கும் சூரி!

 நடிகர் சூரி
நடிகர் சூரி'விடுதலை' தந்த உற்சாகம்: ஓடிடியிலும் தடம் பதிக்கும் சூரி!

’விடுதலை’ படத்தை அடுத்து நடிகர் சூரியின் அடுத்தடுத்தப் படங்கள் குறித்தான தகவல் வெளியாகி வருகிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, விஜய்சேதுபதி உள்ளிட்டப் பலர் நடித்திருந்த ‘விடுதலை’ படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில், நடிகர் சூரி அடுத்தடுத்து நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் படங்கள் குறித்தான தகவல் வெளியாகியுள்ளன.

அந்த வகையில், ‘கூழாங்கல்’ பட இயக்குநர் வினோத் இயக்கத்தில் ‘கொட்டுக்காளி’ படத்தில் சூரி ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இதன் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. மேலும், ‘மதயானைக் கூட்டம்’, ‘இராவணக்கோட்டம்’ உள்ளிட்டப் படங்களை இயக்கிய விக்ரம் சுகுமாரனுடன் ஓடிடி கதைக்களத்திற்காக தற்போது இணைந்திருக்கிறார் சூரி.

1990 காலக்கட்டத்தில் மதுரை மாவட்டப் பகுதிகளில் நடந்த ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை மையமாகக் கொண்டு இந்தக் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்காக முன்னணி ஓடிடி நிறுவனமான ஹாட் ஸ்டாருடன் இதற்காக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. விரைவில் இதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in