நடிகர் சூரி படப்பிடிப்பில் விபத்து: சண்டை பயிற்சியாளர் பலி

சுரேஷ்
சுரேஷ்

நடிகர் சூரி நடிக்கும் 'விடுதலை' படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் சண்டை பயிற்சியாளர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படிப்பிடிப்பு சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது.

இன்று சண்டைக் காட்சி படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த போது ரோப் அறுந்து விழுந்தது. இதில் சண்டைக்காட்சியில் நடித்துக் கொண்டிருந்த சண்டை பயிற்சியாளர் சுரேஷ்(59) என்பவர் படுகாயமடைந்தார். இதனால் சக நடிகர்கள் அவரை மீட்டு கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சுரேஷ் உயிரிழந்தார்.

சுரேஷ்
சுரேஷ்

இந்த விபத்து குறித்து வண்டலூர் ஓட்டேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சண்டை காட்சியின் போது ரோப் அறுந்து விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்கெனவே கிரேன் அறுந்து விழுந்து இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், மீண்டும் அது போன்ற சம்பவம் இன்று நடைபெற்றுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in