பழைய ரூட்டுக்குத் திரும்பும் எஸ்.ஜே.சூர்யா?

பழைய ரூட்டுக்குத் திரும்பும் எஸ்.ஜே.சூர்யா?

தமிழில் ‘வாலி’ படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானார் எஸ்.ஜே. சூர்யா. ’குஷி’, ‘நியூ’, ’இசை’ எனப் பல ஹிட் படங்களைக் கொடுத்தார். கடந்த 2015-ல் வெளியான ‘இசை’ படத்திற்குப் பிறகு இதுவரை எந்தப் படமும் அவர் இயக்கவில்லை. அதற்குப் பதிலாக ’மான்ஸ்டர்’, ‘மாநாடு’, ‘டான்’ என நடிகராகவும் வில்லனாகவும் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார் எஸ்.ஜே. சூர்யா. இந்த நிலையில் அவர் சுமார் 50 கோடி பட்ஜெட்டில் புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்திற்கு ‘கில்லர்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. பான் இந்தியா படமாக உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்தப் படம் தவிர்த்து, ‘பொம்மை’, நடிகர் அமிதாப்பச்சனுடன் இணையும் ‘உயர்ந்த மனிதன்’, விஷாலுஅன் ‘மார்க் ஆண்டனி’, ஷங்கரின் 'RC15’ ஆகிய படங்களை நடிகராக கைவசம் வைத்துள்ளார் எஸ்.ஜே. சூர்யா.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in