’ஜிகர்தண்டா2’ படத்திற்கு பாராட்டுத் தெரிவிக்க ரஜினி செய்த விஷயம்... நெகிழ்ந்த எஸ்.ஜே.சூர்யா!

’ஜிகர்தண்டா2’ விழாவில் எஸ்.ஜே.சூர்யா...
’ஜிகர்தண்டா2’ விழாவில் எஸ்.ஜே.சூர்யா...

’ஜிகர்தண்டா2’ படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழாவில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா படம் குறித்தான தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திப் பேசியுள்ளார்.

’ஜிகர்தண்டா-டபுள் எக்ஸ்’...
’ஜிகர்தண்டா-டபுள் எக்ஸ்’...

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10 அன்று வெளியான படம் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'. படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிப் பெற்ற நிலையில், இப்படத்தின் நன்றி தெரிவிப்பு விழா சென்னையில் நடைபெற்றது.

’ஜிகர்தண்டா2’ படக்குழு...
’ஜிகர்தண்டா2’ படக்குழு...

இதில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா பேசியதாவது, “வெற்றியை பகிர வேண்டிய நேரம் இது. மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட‌ ஊர்களுக்கு சென்று தியேட்டர் ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கிறது என்று பார்த்தோம். ரசிப்புத் தன்மை தற்போது முன்பை விட மிகவும் அதிகமாகி உள்ளது. ஒரு நகைச்சுவை காட்சிக்கு கைத்தட்டல் வரலாம். ஆனால் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளுக்கு வரும் போது ரொம்ப ரொம்ப சந்தோஷமாக உள்ளது.

’நம்ம பேசக்கூடாது, நம்ம படம் பேசனும்’ என்று கார்த்திக் சுப்பாராஜ் சொல்வார். அதே மாதிரி இந்த படம் பேசுகிற‌து. லாரன்ஸ் அவர்கள் எனது மிகப் பெரிய நண்பர், நல்ல மனிதர், நல்ல பெயரை அவர் சம்பாதித்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் எல்லாமே நன்றாக‌ அமைந்தது. அனைவ‌ருக்கும் பிடித்த‌ மாதிரி அமைந்திருக்கிறது. குறிப்பாக சூப்பர் ஸ்டார் இந்தப் படத்தை பார்த்து, அதை ரசித்து, உள்வாங்கி அதை உணர்ந்து பாராட்டுத் தெரிவித்திருப்பது மிகப்பெரிய விஷயம். நல்ல கதையை இயக்குந‌ர் திரையில் காட்டியிருக்கிறார்” என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இதையும் வாசிக்கலாமே...

HBD Nayanthara | சின்னத்திரை தொகுப்பாளர் டூ லேடி சூப்பர் ஸ்டார்! டயானா... நயன்தாராவாக மாறிய கதை!

சோகம்… பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவனின் கால்கள் அகற்றம்!

அதிர்ச்சி… 28 வயது மருத்துவர் மாரடைப்பால் உயிரிழப்பு!

இன்று தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு முகாம்... கையோட ஆதார் எடுத்துட்டு போங்க!

குட்நியூஸ்... எஸ்பிஐ வங்கியில் 8,283 காலிப்பணியிடங்கள்; உடனே விண்ணப்பியுங்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in