'அமரன்’ படப்பிடிப்பு நிறைவு; பிரியாணி ட்ரீட் வைத்து அசத்திய சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன்
Updated on
1 min read

நடிகர் சிவகார்த்திகேயன் ‘அமரன்’ படப்பிடிப்பு முடிவடைந்ததையடுத்து, படகுழுவினருக்கு பிரியாணி ட்ரீட் வைத்து அசத்தியுள்ளார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகியுள்ளது.

'அயலான்’ படத்திற்குப் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘அமரன்’. நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் நடிகை சாய்பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், அது நிறைவடைந்துள்ளது.

இதனால், படக்குழுவினருக்கு பிரியாணி ட்ரீட் வைத்து அசத்தி இருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் வைரலாகப் பகிர்ந்து வருகின்றனர். படக்குழுவினருக்கு ட்ரீட் வைத்தது மட்டுமல்லாது, தன் கையாலேயே பிரியாணியும் பரிமாறி அனைவரையும் கவனித்து இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இடையில் ஏ.ஆர். முருகதாஸ் படத்தில் நடித்து வந்தவர் அங்கிருந்து பிரேக் எடுத்து, ‘அமரன்’ படப்பிடிப்பின் இறுதிக்கட்டத்தில் கலந்து கொண்டு படப்பிடிப்பை முடித்துக் கொடுத்திருக்கிறார். விரைவில் படத்தின் போஸ்ட் புரெடக்‌ஷன் பணிகளும் முடிந்து ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

அமரன் சிவகார்த்திகேயன்
அமரன் சிவகார்த்திகேயன்

மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் காஷ்மீரில் இந்திய இராணுவத்திற்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த சம்பவம் தான் மையக் கரு என்று கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in