நாளை நடிகர் கமல்ஹாசனின் 68ஆவது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து ரசிகர்கள் பலரும் இப்போதிருந்தே அவருக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். அந்த வரிசையில் கமலை, தம்பி என அன்போடு அழைக்கும் நடிகர் சிவகுமார் தம்பிக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
சிவகுமார் தனது வாழ்த்தில், “நடிப்புக் கலையில் அசகாய சூரர்கள் என்று நான் மதித்துப் போற்றுபவர்கள் தமிழ்ச் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜியும், உலகநாயகன் கமலும்தான். அவர்கள் செய்த 'வெரைட்டி ரோல்களை' இதுவரை வேறுயாரும் செய்ய முடியவில்லை. சிவாஜி சரித்திர, சமூக, புராண வேடங்களை யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு செய்து விட்டார்.
கமல், நீங்கள் நடிப்பதோடு நில்லாமல், தேர்ந்த பரதக்கலைஞர், நடனக் கலையில் வல்லவர், பாடகர், திரைக்கதை ஆசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர்.
1973-ல், ‘அரங்கேற்றம்’, ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ என்று துவங்கி ‘தங்கத்திலே வைரம்’, ‘மேல்நாட்டு மருமகள்’- என 8 படங்களில் நாம் இருவரும் சேர்ந்து நடித்தோம். நான் கதாநாயகன், கமல், நீங்கள் பெரும்பாலும் வில்லனாக நடித்தீர்கள். வில்லன் வேடங்களில் நடித்து பெரிய ஹீரோவாக எங்கள் தலைமுறையில் உயர்ந்த முதல் நடிகர் நீங்கள் தான் கமல்.
நடிப்பில் இனி சாதிக்க உங்களுக்கு எதுவும் மிச்சம் இருப்பதாகத் தெரியவில்லை. அரசியல் களம் உங்களுக்காக காத்திருக்கிறது. அமெரிக்கா கொண்டாடிய ஆப்ரஹாம் லிங்கனே இரண்டு முறை தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த பின்னரே அதிபரானார். அரசியலிலும், திரையிலும் சாதித்தத்தை நீங்கள் அரசியலிலும் சாதிக்க முடியும்; துணிந்து இறங்குங்கள்’ என வாழ்த்தியுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
HBD AMBIKA| ‘முதல் மரியாதை’ மீது அம்பிகாவுக்கு வந்த பொறாமை!
தீபாவளி கொண்டாட்டம்... 16,895 பேருந்துகள் இயக்கம்... எந்தெந்த ஊர்களுக்கு எங்கிருந்து? முழு விபரம்!
அதிர்ச்சி... பெண் அதிகாரி கழுத்தறுத்து கொலை! மர்ம கும்பல் வெறிச்செயல்
பிரபல ரவுடி வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு! உயிர் தப்பிய குடும்பம்