தலைமுறைகள் கடந்து கொண்டாடும் வந்தியத்தேவன் யார்? - ‘பொன்னியின் செல்வன்’ பற்றி சிவகுமார் சொல்லும் சுவாரஸ்யங்கள்!

தலைமுறைகள் கடந்து கொண்டாடும் வந்தியத்தேவன் யார்? - ‘பொன்னியின் செல்வன்’ பற்றி சிவகுமார் சொல்லும் சுவாரஸ்யங்கள்!

‘பொன்னியின் செல்வன்’ நாவலில் இடம்பெற்ற கதாபாத்திரங்கள் குறித்த அறிமுகத்தை நடிகர் சிவகுமார் அளித்துள்ளார்.

கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குநர் மணிரத்னம் படமாக்கியுள்ளார். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெறுகிறது.

இந்த நிலையில், பொன்னியின் செல்வன் நாவலில் இடம்பெற்றுள்ள கதாப்பாத்திரங்கள் குறித்து நடிகர் சிவகுமார் அறிமுகம் செய்யும் வீடியோவை நடிகை சுஹாசினி வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில், நாவலில் வந்தியத்தேவன் கதாப்பாத்திரத்துக்கு உள்ள முக்கியத்துவம் குறித்து சிலாகித்து பேசியுள்ளார் சிவகுமார். “ வரலாற்றில் இவ்வளவு சுவாரஸ்யமாக இருந்தாரோ இல்லையோ, ஆனால் நாவலில் படு சுவாரஸ்யமான பாத்திரம் இதுதான். கதாநாயகன் எல்லா இடத்திலும் வெல்வார் என்பதை தாண்டி வந்தியத்தேவன், அடிபடுவான், அவமானப்படுவான், பெண்களிடம் அசடு வழிவான். தலைமுறைகள் கடந்து கொண்டாடும்படி இந்த பாத்திரத்தை எழுதியிருப்பார் கல்கி. நாவல் மாதிரியே இப்படமும் மக்கள் மனதில் நிற்கவேண்டும்” என தெரிவித்துள்ளார்.

மேலும், குந்தவை, நந்தினி, பூங்குழலி, ஆழ்வார்க்கடியான், பழுவேட்டரையர், ஆதித்த கரிகாலன், அருண்மொழி வர்மன் உள்ளிட்ட கதாப்பாத்திரங்கள் குறித்தும் இந்த வீடியோக்களில் அறிமுகம் செய்துள்ளார் சிவகுமார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in