ஷாருக்கானுக்கு எழுதிய கதையில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்!

ஷாருக்கான் -  சிவகார்த்திகேயன்
ஷாருக்கான் - சிவகார்த்திகேயன்

ஷாருக்கானுக்கு எழுதிய கதையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

’மாவீரன்’ பட வெற்றிக்குப் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் தனது 21வது படத்தில் நடித்து வருகிறார். இது தவிர, அவரது ‘அயலான்’ படமும் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் தான் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஷாருக்கானுக்கு எழுதிய கதையில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ’கஜினி’, ‘துப்பாக்கி’ ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்த ஏ.ஆர்.முருகதாஸ் ‘கஜினி’ படத்தை இந்தியிலும் ரீமேக் செய்தார். அங்கும் படம் பெரிய வெற்றிப் பெற்றது. இந்த சமயத்தில்தான் முருகதாஸ் ஷாருக்கானுக்கு ஒரு கதை எழுதி இருக்கிறார்.

மிருணாள் தாக்கூர்
மிருணாள் தாக்கூர்

இந்தப் படத்தின் கதையைதான் இயக்குநர் முருகதாஸ் தமிழுக்கு ஏற்றவாறு மாற்றி அதை இயக்க இருக்கிறார். அடுத்த ஆண்டு தொடங்க இருக்கும் இதன் படப்பிடிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ‘சீதா ராமம்’ புகழ் மிருணாள் தாக்கூர் நடிக்க இருக்கிறார்கள். படத்திற்கு அனிருத் இசையமைப்பார் எனவும் தெரிகிறது. ஏற்கெனவே முருகதாஸ் இயக்கத்தில் உருவான ‘கத்தி’, ‘தர்பார் படங்களுக்கு இசையமைத்த அனிருத் மீண்டும் அவருடன் இணைய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in