தீபாவளி ரேஸிலிருந்து பின்வாங்கியது ‘அயலான்’... ரிலீஸ் எப்போ தெரியுமா?

அயலான்
அயலான்

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடிப்பில், ஆர். ரவி குமார் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள 'அயலான்' திரைப்படம் இந்த வருட தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என முன்பு படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. படப்பிடிப்பு கடந்த வருடத்திற்கு முன்பே முடிவடைந்து இருந்தாலும், இதன் சிஜி பணிகள் காரணமாக வெளியாக தாமதமாகியது. தற்போது இதன் காரணமாகவே தீபாவளி ரிலீஸ் இருந்து விலகி அடுத்த வருடம் பொங்கலுக்கு படம் வெளியாகிறது எனப் படக்குழு அறிவித்துள்ளது.

'அயலான்’...
'அயலான்’...

திரைப்படம் முழுவதும் வரும் வேற்றுகிரகவாசி கதாபாத்திரம் அனைவரும் விரும்பும் வகையில் காட்சிப்படுத்தபட்டுள்ளது. மேலும், 4500+ VFX காட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள லைவ்-ஆக்சன் திரைப்படமாக ‘அயலான்’ இருக்கும். இந்த நேரத்தில், பல ஹாலிவுட் திரைப்படங்களின் CG-க்குப் பின்னால் உள்ள Phantom FX நிறுவனம் இதற்கும் சிஜி பணிகள் செய்துள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் பான் இந்திய வெளியீடாக திரைப்படம் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in