
நடிகர் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடிக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்க நடிகர் சிவகார்த்திகேயன் ஏன் மறுத்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டரான ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்', 'அண்ணாத்த' படங்கள் போதிய வெற்றி பெறவில்லை. இந்த நிலையில், நெல்சன் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்ட முறையில் தயாரிக்கும் இப்படம் ரஜினிகாந்தின் 169-வது படமாகும்.
இதையடுத்து லைகா தயாரிப்பில் ரஜினிகாந்த் இரண்டு படங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த இரண்டு படத்தில் ஒரு படத்தை ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த படத்தில் ரஜினி கவுரவ வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க நடிகர் சிவகார்த்திகேயனை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அணுகியதாக சொல்லப்படுகிறது. ஆனால், அவர் அடுத்தடுத்து நடிக்க வேண்டிய படங்களை முடித்துக் கொடுக்க வேண்டியுள்ளதால், ரஜினியின் படத்தை நிராகரித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் அவருக்குப் பதில் கதாநாயகனாக அதர்வா நடிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.