'மாவீரன்' படத்தில் கார்ட்டூனிஸ்டாக நடிக்கும் சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் 'மாவீரன்' படத்தில் கார்ட்டூனிஸ்டாக நடிக்கிறார்.

’ப்ரின்ஸ்’ படத்திற்கு அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மடோனா அஷ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார். அதிதி ஷங்கர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். இதில் அவர் பத்திரிகையாளராக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் ஈ.சி.ஆர் பகுதியில் படமாக்கப்பட்டு வரும் நிலையில் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது தெரியாமல் இருந்தது.

தற்போது அவர் கார்ட்டூனிஸ்ட் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அதிதி பத்திரிகையாளராக வேலை பார்க்கும் அலுவலகத்தில் கார்ட்டூனிஸ்டாக சேர்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். வாழ்வில் நடைபெறும் உண்மை சம்பவங்கள் அடிப்படையில் அவர் கார்ட்டூன் வரைவார் என்றும் சொல்லப்படுகிறது. நடிகர் மிஷ்கின் படத்தில் வில்லனாக நடிக்கிறார். யானிக் பென் படத்தின் சண்டைப் பயிற்சியாளர். ’மாவீரன்’ திரைப்படம் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in