அஜித்துடன் சிவகார்த்திகேயன் மாஸ் சந்திப்பு: வைரலாகும் புகைப்படம்

அஜித்துடன் சிவகார்த்திகேயன் மாஸ் சந்திப்பு: வைரலாகும் புகைப்படம்

நடிகர்கள் சிவகார்த்திகேயனும், அஜித்தும் சந்தித்த புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

அஜித் நடிப்பில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான ஏகன் படத்தில், சிவகார்த்திகேயன் நடித்திருப்பார். அப்போது, அஜித் பற்றி பேசிய சிவகார்த்திகேயன், “நான் அஜித்தை சந்திக்கும் போதெல்லாம் ஒரு எனர்ஜி கிடைக்கும். அவரை அடிக்கடி சந்திக்க மாட்டேன். ஆனால் அவரை சந்திக்கும் போதெல்லாம் எனக்கு பல அறிவுரை வழங்குவார். அவர் அறிவுரை கூறும் போது கண்டிப்பாக வருமான வரியை ஒழுங்காக கட்டிவிடு என்று கூறுவார். அவர் சொன்னதிலிருந்து நான் என்னுடைய வரியை ஒழுங்காக கட்டி வருகிறேன்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன், அஜித்தை சமீபத்தில் சந்தித்து, புகைப்படம் எடுத்து உள்ளனர். அதை அவர் தனது ட;விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சிவகார்த்திகேயன், “நீண்ட நாட்களுக்குப் பிறகு ஏ.கேவை சந்தித்தேன். அவருடான மீண்டும் ஒரு சந்திப்பு, வாழ்நாள் முழுவதும் இருக்கும். அனைத்து நேர்மறையான வார்த்தைகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டு உள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in