கிரிக்கெட் வீரர் நடராஜனின் பயோபிக்: இயக்குநராகிறார் சிவகார்த்திகேயன்

கிரிக்கெட் வீரர் நடராஜனின் பயோபிக்: இயக்குநராகிறார் சிவகார்த்திகேயன்

தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குகிறார்.

தமிழ் சினிமாவின் பிரபல ஹீரோவான சிவகார்த்திகேயன் நடிப்பதோடு பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார். 'கனா', 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா', டான்' உள்ளிட்ட படங்களை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். அத்துடன் படங்களுக்கு பாடல்களை எழுதுவதோடு பாடல்களையும் பாடி வருகிறார். இவர் பாடிய 'இன்னா மயிலு’ (லிஃப்ட்) பாடல் இளையோர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. நடிகர் விஜய் நடித்த 'பீஸ்ட்' படத்தில் அரபிக்குத்து பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார். யூடியூப்பில் அதிக பார்வையாளர்களைக் கடந்து இப்பாடல் சாதனை படைத்தது.

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு படத்தை இயக்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. முன்னதாக தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் சிவகார்த்தியேன் நடிப்பதாகத் தகவல் வெளியானது. அதை நடராஜனும் உறுதிப்படுத்தியிருந்தார்.

இது தொடர்பாக நடராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "என் பயோபிக்கை என் கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பிறகுதான் எடுக்கவேண்டும் எனச் சொல்லிக்கொண்டிருந்தேன். இப்படத்தில் சிவகார்த்திகேயன் தான் நடிக்கிறார். அவர்தான் இயக்கவும் போகிறார் என நினைக்கிறேன்" என கூறியுள்ளார். பயோபிக் படத்தில் நடிப்பதோடு அப்படத்தை சிவகார்த்திகேயன் இயக்கவும் செய்கிறார் என்ற தகவலை நடராஜன் வெளிப்படுத்தியுள்ளார். சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in