சிம்புவுடன் மோதும் சிவகார்த்திகேயன்?

சிம்புவுடன் மோதும் சிவகார்த்திகேயன்?

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ திரைப்படம் சிம்புவின் ‘பத்துதல’ படத்துடன் ஒன்றாக வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

’மண்டேலா’ பட இயக்குநர் மடோனா அஷ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் உள்ளிட்டப் பலர் நடித்து வரும் திரைப்படம் ‘மாவீரன்’. இதில் அதிதி ஷங்கர் பத்திரிகையாளராக நடிக்க, சிவகார்த்திகேயன் கார்ட்டூனிஸ்டாக நடிக்கிறார். புதுவருடத்திற்காக படக்குழு சிவகார்த்திகேயன் இருக்கும்படியான போஸ்டர் ஒன்றை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்பு இன்னும் நிறைவடையாத நிலையில், படத்தை இந்த வருடம் மார்ச் மாத இறுதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், புது வருடத்தில் நடிகர் சிம்பு தன்னுடைய ‘பத்துதல’ திரைப்படம் மார்ச் 30ம் தேதி வெளியாகும் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து மார்ச் இறுதி வெளியீடு என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டால், சிம்பு vs சிவகார்த்திகேயன் என இவர்களது படங்கள் வெளியீடு இருக்கும். நெல்சன் இயக்கத்தில் சிம்புவின் ‘வேட்டை மன்னன்’ படத்தில்தான் சிவகார்த்திகேயன் முதன் முதலாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ’மாவீரன்’ படத்தில் இயக்குநர் மிஷ்கின் வில்லனாக நடிக்க தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் படம் உருவாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in