நடிகர் சிம்புவுக்கு இலங்கை தொழிலதிபர் மகளுடன் விரைவில் திருமணம்?

நடிகர் சிம்பு
நடிகர் சிம்புநடிகர் சிம்புவிற்கு இலங்கை தொழிலதிபர் மகளுடன் விரைவில் திருமணம்?

இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர் மகளுடன் நடிகர் சிம்புவிற்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் சிம்பு தற்போது முன்னணி நடிகராக உள்ளார். நடிப்பு மட்டுமின்றி இயக்குநர் என பன்முகத்தன்மை கொண்ட சிம்புவிற்கு 40 வயதாகியும் திருமணம் நடைபெறவில்லை. ஏற்கெனவே பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட நிலையில், அவருக்கு எப்போது திருமணம் ஆகும் என்ற ஆவலில் அவரது ரசிகர்கள் இருந்தனர். ஏனெனில், சிம்புவின் தம்பி, தங்கைகளுக்கு திருமணமாகி விட்டது. மேலும் சிம்புவின் உடல் எடை அதிகரித்ததால், பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு பறிபோனதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில்,உடற்பயிற்சி மூலம் தனது உடலை சிலிம் நிலைக்கு கொண்டு வந்துள்ள சிம்பு, கௌதம் வாசுதேவன் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு', வெங்கட்பிரபு இயக்கத்தில் 'மாநாடு' ஆகிய படங்களில் நடித்தார். இப்படங்கள் இரண்டும் வசூலில் சாதனை படைத்தன. இதையடுத்து சிம்புவிற்குத் திருமணம் செய்ய பெண் தேடும் பணியில் அவரது பெற்றோர் டி.ராஜேந்தர், உஷா ராஜேந்தர் தம்பதியர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், சிம்புக்கு பெண் பார்க்கப்பட்டு விட்டதாகவும், விரைவில் அவருக்குத் திருமணம் நடைபெற உள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகளை சிம்புவுக்கு திருமணம் செய்ய பேசி முடித்திருப்பதாகவும், விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், சிம்பு நடித்த ’பத்து தல’ திரைப்படம் மார்ச் மாதம் வெளியாக உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in