மீண்டும் சிக்கலில் சிம்பு... போர்க்கொடி தூக்கும் தயாரிப்பாளர்கள்?

நடிகர் சிம்பு
நடிகர் சிம்பு

நடிகர் சிம்புவுக்கு எதிராகத் தயாரிப்பாளர்கள் ஒன்று திரள முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால், அவரது அடுத்தடுத்தப் படங்கள் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் சிம்புவை தங்கள் படங்களில் கமிட் செய்த இயக்குநர்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர்.

திரையுலகில் தனது இரண்டாவது இன்னிங்ஸை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் எடுத்து செல்ல வேண்டும் என நினைக்கிறார். ஆனால், பிரச்சினைகள் அவரை விடுவதாக இல்லை. தேசிங்கு பெரியசாமியுடன் தனது 48-வது படத்தை அறிவித்து ஒரு வருடம் கடந்தும் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. வரலாற்றுக் கதை என்பதால் நேரம் எடுக்கும் என சொல்லி வந்தாலும் அந்தப் படம் டிராப் ஆகிவிட்டதா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு நீங்கியதாகத் தெரியவில்லை.

நடிகர் சிம்பு
நடிகர் சிம்பு

இந்தப் படத்தின் நிலை இப்படியிருக்க, கமலின் ‘தக் லைஃப்’ படத்தில் சிம்பு இணைந்தார் என ஒரு செய்தி வெளியானது. கால்ஷீட் பிரச்சினை காரணமாக ஜெயம் ரவி, துல்கர் சல்மான் இந்தப் படத்தில் இருந்து விலகிவிட்டதாகவும் அதற்கு பதிலாக தான் சிம்பு இணைந்தார் எனவும் சொல்லப்பட்டது.

தற்போது கால்ஷீட் பிரச்சினை முடிந்து ஜெயம்ரவி, துல்கர் மீண்டும் இணைந்துவிட்டதாகவும் இவர்களோடு சிம்புவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் எனவும் சொல்லப்படுகிறது. படக்குழு இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால், சிம்புவின் படங்கள் இப்படி தொடங்காமல் இருக்கக் காரணம் தயாரிப்பாளர்கள் ஐசரி கணேஷ், மைக்கேல் ராயப்பன் போன்றவர்களுடன் ஏற்பட்ட பிரச்சினைதான் காரணம் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

நடிகர் சிம்பு
நடிகர் சிம்பு

சிம்பு மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இவர்கள் கொடுத்தப் புகாரால் சிம்புவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்க முடிவு செய்திருக்கிறதாம் தயாரிப்பாளர்கள் சங்கம். பிரச்சினைகளை முடித்தால் மட்டுமே சிம்புவின் படங்கள் சுமுகமாகத் தொடங்கும் எனவும் தெரிகிறது.

இதையும் வாசிக்கலாமே...

இந்த 5 தொகுதிகளில் வெற்றி இழுபறி!

தமிழ்நாட்டின் மிகப்பெரிய சந்தைக்கு 2 நாட்கள் விடுமுறை... தேர்தலை முன்னிட்டு அறிவிப்பு!

புதுச்சேரியில் இன்று முதல் 144 தடை உத்தரவு... தேர்தல் ஆணையம் அதிரடி!

தாயைப் பிரிந்த ஏக்கம்... 25 நாட்களாக தவித்த குட்டியானை உயிரை இழந்தது!

நேரிலும், செல்போனிலும் வாலிபர் காதல் டார்ச்சர்.... மனமுடைந்த பள்ளி மாணவி தற்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in