புது லுக்கில் நடிகர் சிம்பு: வைரல் புகைப்படங்கள்!

புது லுக்கில் நடிகர் சிம்பு: வைரல் புகைப்படங்கள்!
புது லுக்கில் நடிகர் சிம்பு: வைரல் புகைப்படங்கள்!

நடிகர் சிம்பு புது லுக்கில் உள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

’மாநாடு’, ‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்து தல’ ஆகிய படங்களை முடித்துவிட்டு நடிகர் சிம்பு தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தினை நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கிறார். இது குறித்தான டீசர் கிளிம்ப்ஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. சரித்திர கதையாக உருவாகி வரும் இந்தப் படத்திற்காக நடிகர் தலை முடியை வளர்த்து வருகிறார்.

இந்தநிலையில், நடிகர் சிம்புவின் புதுத்தோற்றம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மலேசியாவில் நடந்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்ற சிம்புவின் ஏர்போர்ட் புகைப்படங்கள் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. இதுமட்டுமல்லாது, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிம்பு மேடையில் பாடலும் பாடியிருக்கிறார். அந்த வீடியோக்களும் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in