Simbu 48: உடல் எடையை குறைத்தார் சிம்பு... மாஸான டிரான்ஸ்ஃபர்மேஷன் வீடியோ!

நடிகர் சிம்பு
நடிகர் சிம்பு

நடிகர் சிம்புவின் டிரான்ஸ்ஃபர்மேஷன் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. உடல் இளைத்து, ஹேர் ஸ்டைல் மாற்றியுள்ள சிம்புவின் இந்த வீடியோவை ரசிகர்கள் உற்சாகத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.

’மாநாடு’, ‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்து தல’ எனத் தனது கம்பேக்கில் நடிகர் சிம்பு வெற்றிப்படங்களைக் கொடுத்து வருகிறார். இடையில் சில பிரச்சினைகள் காரணமாக உடல் எடை கூடிய சிம்பு லாக்டவுன் சமயத்தில் வீட்டிற்குள்ளேயும் கேரளாவில் சிறப்பு சிகிச்சைகள் எடுத்தும் உடல் எடைக் குறைத்து ஆளே அசத்தலாக மாறியிருந்தார். சிம்புவின் இந்த டிரான்ஸ்ஃபர்மேஷனால் ‘மாநாடு’ படத்தின் சில காட்சிகளிலும் அவரை கிராஃபிக்ஸ் மூலமாக மாற்றி இருந்தார்கள். பிறகு ‘வெந்து தணிந்தது காடு’ படத்திலும் உடல் எடைக் குறைத்தே நடித்திருந்தார். ஆனால், ‘பத்து தல’ படத்தில் அவரது கதாபாத்திரத்திற்காக மீண்டும் உடல் எடை அதிகரிக்க வேண்டி இருந்ததால், உடல் எடை கூடிய சிம்பு விரைவில் அதையும் குறைத்துத் திரும்புவேன் என ‘பத்து தல’ பட விழாவில் ரசிகர்கள் முன்னிலையில் உணர்ச்சிப்பூர்வமாக பேசியிருந்தார்.

தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சரித்திரக் கதையாக உருவாக இருக்கும் சிம்பு இரட்டை வேடத்தில் நடிப்பதாக சொல்லப்படும் இந்தப் படத்திற்காக தற்காப்பு கலை பயிற்சிக்காக வெளிநாடு சென்றுள்ளார் சிம்பு. தோள்பட்டை வரை நீண்ட முடியுடன் ஏற்றிய உடல் எடையை சிம்பு குறைத்து ஆளே அட்டகாசமாக மாறியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in