'தீ தளபதி’: நடிகர் விஜய்க்கு பாடல் பாடிய சிலம்பரசன்

'தீ தளபதி’: நடிகர் விஜய்க்கு பாடல் பாடிய சிலம்பரசன்

‘வாரிசு’ படத்தில் நடிகர் விஜய்க்கு சிலம்பரசன் பாடல் பாடியுள்ளார்.

வம்சி இயக்கத்தில் தில் ராஜூ தயாரிப்பில் நடிகர் விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படம் பொங்கல் வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது. ஏற்கெனவே படத்தில் இருந்து ‘ரஞ்சிதமே’ முதல் பாடல் வெளியாகி இருக்கும் நிலையில், இரண்டாவது பாடலான ‘தீ தளபதி’ பாடல் நாளை வெளியாக இருக்கிறது. நடிகர் விஜய்யின் 30-வது வருடத்தைக் கொண்டாடும் விதமாக இந்தப் பாடல் தமன் இசையில் வெளியாக இருக்கிறது.

இதற்கான அறிவிப்பு நேற்று வந்தது. இந்தப் பாடலை நடிகர் சிலம்பரசன் பாடியுள்ளார். இது படத்தில் அறிமுகப் பாடலாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. ’துணிவு’ படத்தில் ஜிப்ரான் இசையில் அஜித்திற்கான அறிமுகப் பாடலை அனிருத் பாடியிருக்கும் நிலையில் ‘வாரிசு’ படத்திலும் விஜய்க்கான அறிமுகப் பாடலை அனிருத் பாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ‘தீ தளபதி’ என்ற அறிமுகப் பாடலை சிலம்பரசன் பாடியிருக்கிறார் என்றத் தகவல் ரசிகர்களிடையே உற்சாகத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in