மீண்டும் இயக்கத்துக்குத் திரும்பும் சிலம்பரசன்!

மீண்டும் இயக்கத்துக்குத் திரும்பும் சிலம்பரசன்!

நடிகர் சிலம்பரசன், விரைவில் மீண்டும் பட இயக்கத்துக்குத் திரும்ப இருப்பதாகத் தெரிவித்து இருக்கிறார்.

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், நடிகர் சிலம்பரசன் நடித்திருக்கக் கூடிய திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’. நேற்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் படத்தை ஒட்டி நடிகர் சிலம்பரசன் சமீபத்தில் கொடுத்துள்ள நேர்காணல் ஒன்றில் விரைவில் தான் மீண்டும் இயக்குநராக இருப்பதைத் தெரிவித்து இருக்கிறார்.

கடந்த 2006-ல் வெளியான ‘வல்லவன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் சிலம்பரசன். படமும் ரசிகர்களிடையே வெற்றியடைந்தது. படம் வெளியாகிக் கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் ஆகும் நிலையில், சிம்பு இன்னும் தனது இரண்டாவது படத்தை இயக்கவில்லை.

இந்த நிலையில், நடிகராக தனது 50-வது படத்தை இயக்கிய பின்பு மீண்டும் இயக்குநராக இருப்பதாகத் தெரிவித்து இருக்கிறார் சிலம்பரசன். ’வெந்து தணிந்தது காடு’ சிம்புவின் 47-வது படம். இதுத்தவிர்த்து ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்து தல’, ’கொரோனா குமார்’ ஆகிய படங்களைக் கைவசம் வைத்துள்ளார். தன்னுடைய 50-வது படத்திற்காக இயக்குநர் ராமுடன் கைக்கோர்க்க உள்ளார்.

இந்தப் படங்களை முடித்து விட்டு, இயக்குநராக தனது இரண்டாவது படத்தை கையில் எடுப்பதாக சிம்பு தெரிவித்து இருக்கிறார். அவர் நிறைய கதைகளை எழுதி வைத்திருப்பதாகவும், அதில் இருந்து சிறந்த ஒன்றை தேர்ந்தெடுத்து தானே இயக்கி நடிப்பதற்கு எண்ணம் வைத்திருப்பதையும் அந்த நேர்காணலில் சிம்பு தெரிவித்து இருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in