
மணி ரத்னம் இயக்கத்தில் ‘தக் லைஃப்’ படத்தில் நடிகர் கமலுடன் நடிக்க வந்த வாய்ப்பை சிலம்பரசன் மறுத்து விட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கமல்ஹாசனின் 68வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், ‘இந்தியன்2’, ‘KH 234’ ஆகிய படங்களில் இருந்து அடுத்தடுத்து அப்டேட்களை படக்குழுவினர் கொடுத்து வருகின்றனர். அதில் நடிகர் கமல்ஹாசன் - மணி ரத்னத்துடன் ‘நாயகன்’ படத்திற்குப் பிறகு இணையும் 234 வது படத்தின் தலைப்பு ‘தக் லைஃப்’ என நேற்று அறிவித்தனர். இதன் அறிமுக டீசரும் வெளியானது.
இந்தப் படத்தின் டைட்டில் ஆங்கிலத்தில் இருக்கிறது, படத்தில் சாதிப்பெயர் பயன்படுத்தினார் கமல், ஆங்கிலப் படத்தின் காப்பி என இதைச் சுற்றி பல சர்ச்சைகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், ’தக் லைஃப்’ படத்தில் நடிகர் சிம்புவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்ததாகவும், ஆனால் அவர் அதனை நிராகரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதன்படி இப்படத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது சிம்பு தானாம். ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டாராம். அதற்கு காரணம் ’எஸ்.டி.ஆர்.48’ திரைப்படம் எனக் கூறப்படுகிறது.
இந்தப் படத்திற்காக நடிகர் சிம்பு முடியை நீளமாக வளர்த்து வருகிறாராம். ஆனால் ’தக் லைஃப்’ படத்தில் நடித்தால் அந்த கேரக்டருக்காக முடி மற்றும் தாடியை எடுக்க வேண்டிய சூழல் இருப்பதால் அந்த கேரக்டரில் நடிக்க மறுத்துவிட்டாராம் சிம்பு. இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசன்தான் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
HBD Kamalhassan: கமல்ஹாசன் வேண்டுகோளை நிராகரித்த ’சூப்பர் ஸ்டார்’!
இன்று 19 மாவட்டங்களில் கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
சத்தீஸ்கர் வாக்குப்பதிவில் பரபரப்பு... குண்டுவெடிப்பில் பாதுகாப்பு படை வீரர் காயம்!
திமுகவுடன் கூட்டணியா? கமல் சொன்ன 'நச்' பதில்!
வீட்டை காலி செய்ய மிரட்டுகிறார்! நடிகர் பிரபுதேவா சகோதரர் மீது பரபரப்பு புகார்