சிம்புவுக்கு அடித்த ஜாக்பாட்... கமலுடன் ‘தக் லைஃப்’ படத்தில் நடிக்க கமிட் ஆனார்!

கமல்ஹாசன் - சிலம்பரசன்
கமல்ஹாசன் - சிலம்பரசன்

மணி ரத்னம்- கமல்ஹாசன் கூட்டணியில் ‘தக் லைஃப்’ படம் உருவாகி வருகிறது. இதில் தேதி பிரச்சினைகள் காரணமாக நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி இருவரும் வெளியேறி இருக்கிறார்கள். இதையடுத்து இப்போது சிம்பு படத்தில் கமிட் ஆகி இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

’நாயகன்’ படத்திற்குப் பிறகு நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் மணி ரத்னம் இணைந்துள்ள படம் ‘தக் லைஃப்’. இதில் நடிகர்கள் த்ரிஷா, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி, துல்கர் சல்மான் ஆகியோரும் நடிக்கிறார்கள் எனப் படக்குழு அறிவித்தது. ஆனால், தேதி பிரச்சினைகள் காரணமாக துல்கர் சல்மான் முதலில் படத்தில் இருந்து விலகினார். பின்பு, இதே காரணத்தை சொல்லி நடிகர் ஜெயம் ரவியும் சமீபத்தில் விலகினார். இவர்களுக்குப் பதிலாக யார் நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

அந்த வகையில், துல்கர் சல்மான் கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு நடிக்க இருக்கிறார் என்ற தகவல் இப்போது வெளியாகி இருக்கிறது. இது ரசிகர்களை உற்சாகமடையச் செய்திருக்கிறது.

 சிலம்பரசன்
சிலம்பரசன்

கமலின் தீவிர ரசிகரான சிம்பு இதற்கு முன்பே, கமலுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தி இருந்தார். கமலும் சிம்புவுடன் நடிக்க வேண்டும் என்ற தனது ஆர்வத்தையும் வெளிப்படுத்தினார். இப்போது அதற்கான படமாக ‘தக் லைஃப்’ அமைந்திருக்கிறது. கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு தனது 48-வது படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கடுத்து, ‘தக் லைஃப்’ படத்தில் இவருக்கான போர்ஷன் இந்த வருடத்தின் பிற்பாதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

அச்சச்சோ வீடியோ... ரோகித் சர்மா மனைவியை பின்னாலிருந்து கட்டிப் பிடித்த ஹர்திக்!

'ஜெய் ஸ்ரீ ராம்’ என்று சொன்ன சிறுவனை கொலைவெறியுடன் தாக்கிய கும்பல்!

லேப் டாப் திருடுவது தான் இவரது வேலை... ஐசிஐசிஐ வங்கி பெண் ஊழியர் கைது!

மீண்டும் ஹிட்டான கேரள பாடல்... வைரலாகும் லுங்கி டான்ஸ் வீடியோ!

'சிங்கப்பூர் சேலை அந்த செவத்தப் பொண்ணு மேல'... சீனாவை கலக்கும் இளம்பெண்ணின் வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in