`என் நண்பனுக்காக இதைச் செய்திருக்கிறேன்'- பாலிவுட்டில் பாடகராக அறிமுகமாகும் சிலம்பரசன் நெகிழ்ச்சி!

`என் நண்பனுக்காக இதைச் செய்திருக்கிறேன்'- பாலிவுட்டில் பாடகராக அறிமுகமாகும் சிலம்பரசன் நெகிழ்ச்சி!

பாலிவுட்டில் பாடகராக அறிமுகமாகிறார் சிலம்பரசன்.

’டபுள் XL’ படத்தின் மூலமாக பாலிவுட்டில் நடிகராக அறிமுகமாகிறார் நடிகர் மஹத். சோனாக்‌ஷி சின்ஹா மற்றும் ஹீமா குரேஷி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இந்தப் படத்தில் கதாநாயகன் சஹீர் இக்பாலுடன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் மஹத். இப்போது படத்தில் இருந்து ‘தாலி தாலி’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலைதான் நடிகர் சிலம்பரசன் பாடியுள்ளார்.

பப் ஸ்டைல் பாடலாக தமிழ், இந்தி, ஆங்கிலம் என கலந்து வெளியாகியுள்ள இந்தப் பாடலை தனது சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ள சிம்பு, ‘இந்தியில் பாடகராக இது எனக்கு அறிமுகம். என் நண்பன் மஹத்துக்காக இதை நான் செய்திருக்கிறேன். உன்னை நினைத்து எனக்குப் பெருமையாக இருக்கிறது. ’டபுள் XL’ படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்’ என தெரிவித்துள்ளார்.

நடிகர் சிலம்பரசனுக்கு மஹத் நன்றி தெரிவித்து ‘நீங்கள் எப்போதும் என்னுடைய குரு, இன்ஸ்பிரேஷன், நல்ல நண்பன். என்னுடைய கனவுகளை நிறைவேற்ற எப்போதும் துணை நிற்பதற்கு நன்றி’ எனத் தெரிவித்துள்ளார்.

’வெந்து தணிந்தது காடு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது ‘பத்து தல’, ‘கொரோனா குமார்’ ஆகிய படங்களில் சிலம்பரசன் பிஸியாக உள்ளார். மேலும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் இரண்டாம் பாகத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகளும் தற்போது நடந்து வருவதால் அடுத்து அதிலும் சிம்பு பிஸியாகி விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in