'சித்தா’ படம் கொடுத்த பொறுப்பு... அடுத்தப் படத்தை அறிவித்தார் நடிகர் சித்தார்த்!

'சித்தார்த்40’
'சித்தார்த்40’

'சித்தா’ படம் வரவேற்புப் பெற்றதை அடுத்து நடிகர் சித்தார்த் இயக்குநர் ஸ்ரீகணேஷூடன் தனது அடுத்தப் படத்தை அறிவித்துள்ளார்.

நடிகர் சித்தார்த் தனது அடுத்தப் படம் குறித்து அறிவித்துள்ளார். ‘8 தோட்டாக்கள்’ மூலம் புகழ்பெற்ற இயக்குநர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில்தான் அவர் நடிக்க இருக்கிறார். இது சித்தார்த்தின் நாற்பதாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி சித்தார்த் பகிரும்போது, "ஸ்ரீகணேஷ் போன்ற இளம் திறமையுடன் இணைவதில் மகிழ்ச்சி. சினிமா ஆர்வலர்களும், குடும்பத்தினரும் 'சித்தா' படத்தின் மீது நிறைய அன்பு கொடுத்தனர்.

நடிகர் சித்தார்த்
நடிகர் சித்தார்த்

பார்வையாளர்களின் உணர்வுகளுடன் ஈர்க்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்ற பொறுப்பை இந்தப் படம் கொடுத்தது. ’சித்தா’ படத்திற்குப் பிறகு பல கதைகளைக் கேட்டேன். ஆனால், ஸ்ரீகணேஷ் சொன்ன கதை உடனே பிடித்து விட்டது. அடுத்தடுத்த அறிவிப்புகள் வரும்” என்றார்.

இது குறித்து இயக்குநர் ஸ்ரீகணேஷ் கூறும்போது, "இந்தப் படத்திற்கான கதையை எழுதத் தொடங்கியபோதே, சித்தார்த்தான் பொருத்தமானவராக இருப்பார் என்று நம்பினேன். கதையை முழு ஈடுபாட்டோடு கேட்டவர், அவரது கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார்.

நடிகர் சித்தார்த்
நடிகர் சித்தார்த்

படத்தில் நடிப்பதற்காக திரைத்துறையில் உள்ள மற்ற பெரிய நடிகர்களுடனும் பேசி வருகிறோம். அதில் நமக்குப் பிடித்தமான திரைத்துறை நட்சத்திர ஜோடிகளும் இருக்கிறார்கள்” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

லிவிங் டூ கெதர் வாழ்க்கை... நடிகை இறந்த ஒரே வாரத்தில் சின்னத்திரை நடிகரும் தற்கொலை!

சிறுவன் உயிரிழந்த விவகாரம்... குற்றாலம் அருவிகளை வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு!

அதிர்ச்சி... 4 மாதங்களில் 430 கொலைகள்... கதி கலங்க வைக்கும் புள்ளி விவரம்!

இசையமைப்பாளர் ரஹ்மான் மகளின் புது அவதாரம்... நெகிழ்ச்சி பதிவு!

அம்பேத்கர் இயற்றிய அரசியலமைப்பை எந்த அரசாலும் மாற்ற முடியாது... அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in