எனது ட்வீட் வார்த்தை நகைச்சுவையானது; அதில் உள்நோக்கம் இல்லை - சித்தார்த்

சாய்னாவிடம் மன்னிப்பும் கோரினார்
சித்தார்த்
சித்தார்த்hindu

"எனது ட்வீட் வார்த்தை நகைச்சுவையானது மட்டுமே, உள்நோக்கம் கொண்டது அல்ல. நீங்கள் எப்போதும் என் சாம்பியனாக இருப்பீர்கள்" என்று இந்திய பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாலிடம் நடிகர் சித்தார்த் மன்னிப்பு கேட்டுள்ளார்.

மத்திய அரசின் நலத் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக அண்மையில் பஞ்சாப் மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்டார் பிரதமர் மோடி. ஆகாய மார்க்கமாக செல்ல இருந்த பிரதமர் மோடி, மோசமான வானிலை காரணமாக சாலை மார்க்கமாக காரில் சென்றார். அப்போது, சாலையில் விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் பாலத்தில் 20 நிமிடங்களுக்கு மேல் காரில் பிரதமர் காத்திருந்தார். பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு பெரும் சர்ச்சையாக வெடித்தது.

பிரதமரின் பாதுகாப்பு குறித்து கருத்து தெரிவித்த பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி, "பிரதமரின் சாலை மார்க்க பயணம் எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை" என்று கூறியிருந்தார். பிரதமரின் பாதுகாப்புக் குறைபாடு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக உயர்மட்ட குழு விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

சாய்னா நேவால்
சாய்னா நேவால்hindu

இதனிடையே, பஞ்சாப்பில் பிரதமர் மோடியின் பாதுகாப்பு குறைபாடு குறித்த இந்திய பேட்மின்டன் வீராங்கனை சாய்னாவின் பதிவுக்கு, நடிகர் சித்தார்த் சர்ச்சைக்குரிய வார்த்தைகளில் ட்வீட் செய்திருந்தார். இது பெரும் விவாதப் பொருளாக மாறியது. இந்நிலையில், சாய்னா நேவாலிடம், நடிகர் சித்தார்த் மன்னிப்பு கோரியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ட்வீட்டில் பதிவிட்ட, சரியாக புரிந்து கொள்ளப்படாத எனது நகைச்சுவைக்கு மன்னிப்புக் கோருகிறேன். எனது ட்வீட் வார்த்தை நகைச்சுவையானது மட்டுமே, உள்நோக்கம் கொண்டது அல்ல. நீங்கள் எப்போதும் என் சாம்பியனாக இருப்பீர்கள்” என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in