எலான் மஸ்கிடம் ஜிபே நம்பர் கேட்ட நடிகர் சிபி சத்யராஜ்: வைரலாகும் பதிவு!

எலான் மஸ்கிடம் ஜிபே நம்பர் கேட்ட நடிகர் சிபி சத்யராஜ்: வைரலாகும் பதிவு!

எலான் மஸ்கிடம் ஜிபே எண் கேட்டு நடிகர் சிபி சத்யராஜின் ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.

பிரபல சமூகவலைதளமான ட்விட்டரை வாங்கியுள்ள எலான் மஸ்க் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ட்விட்டரில் ப்ளூ டிக் வசதியுடன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மாதம் எட்டு டாலர்கள் வசூலிக்கப்படும் என அறிவித்தார். ட்விட்டரைக் கையகப்படுத்திய பின்பு அதில் மேற்கொள்ளப்படும் சில சீர்த்திருத்தங்களில் இதுவும் ஒன்று என அறிவித்த எலனின் இந்த அறிவிப்புக்கு ட்விட்டர் பயனர்கள் பலரும் தங்களது கடுமையான எதிர்ப்புகளைப் பதிவு செய்து வந்தனர்.

இந்த எதிர்ப்புகளுக்குப் பிறகும் மஸ்க் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ‘இது குறித்து உங்களுடைய எதிர்ப்புகளைப் பதிவு செய்பவர்கள் பதிவு செய்து கொண்டே இருங்கள். ஆனால், ப்ளூ டிக் வசதிக்கு இனி மாதம் எட்டு டாலர்கள்’ என ட்வீட் செய்துள்ளார். இந்த ட்வீட்டினை நடிகர் சிபி சத்யராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ‘எனக்கு உங்களுடைய ஜிபே நம்பர் அனுப்புங்கள். பணம் அனுப்புகிறேன்’ என்று ட்வீர் செய்துள்ளார். இந்தப் பதிவுதான் தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

பிரபலங்கள், அரசியல்வாதிகள், பெரிய நிறுவனங்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கு ட்விட்டர் நிறுவனம் இந்த ப்ளூ டிக் வசதிக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in