சிலம்ப வீரர்களுக்கு நடிகர் ’மெட்ரோ’ சிரீஷ் உதவி

சிலம்ப வீரர்களுக்கு நடிகர் ’மெட்ரோ’ சிரீஷ் உதவி
நான்சி எஸ்தர், அபிஷேக் ராஜனுடன் நடிகர் சிரீஷ்

நடிகர் சிரிஷ், சிலம்ப வீரர்கள், சர்வதேச போட்டியில் பங்குகொள்ள உதவி செய்துள்ளார்

’மெட்ரோ’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் சிரிஷ். தொடர்ந்து ராஜா ரங்குஸ்கி, பிளட் மனி ஆகிய படங்களில் நடித்துள்ளார். அடுத்து சில படங்களில் நடிக்க இருக்கிறார். அவர் சிலம்பம் சாம்பியன்களுக்கு, சர்வதேச;g போட்டியில் கலந்து கொள்வதற்கான உதவிகளைச் செய்துள்ளார்.

சிரிஷ்
சிரிஷ்

இதுபற்றி சிரிஷ் கூறும்போது, “11-ம் வகுப்பு படிக்கும் நான்சி எஸ்தர் மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் அபிஷேக் ராஜன் ஆகிய திறமையான குழந்தைகளைப் பற்றிய செய்தியை நண்பர் மூலம் அறிந்தேன். அவர்களின் திறமையையும் சாதனையையும் பார்த்த பிறகு உண்மையில் பிரமித்துப் போனேன். பல மாவட்டம் மற்றும் தேசிய அளவிலான சாம்பியன்ஷிப்களை வென்றுள்ளனர்.

பிப்ரவரி 2-வது வாரம் நேபாளத்தில் நடக்கவிருந்த யூத் கேம்ஸ் சர்வதேச சாம்பியன்ஷிப்பில் அவர்களால் பங்கேற்க முடியவில்லை என்பதை அறிந்தேன். அவர்களின் பயணம் மற்றும் தங்கும் செலவுகளை நான் ஏற்றுக்கொள்ள முடிவு செய்தேன். எதிர்காலத்திலும் திறமையானவர்களை ஊக்குவிக்க இதுபோன்ற உதவிகளைச் செய்வேன்” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in