விஜய் மில்டன் இயக்கத்தில் நடிக்கும் ஷாம்!

நடிகர் ஷாம்
நடிகர் ஷாம்விஜய் மில்டன் படத்தில் நடிக்கும் ஷாம்

ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர் ஷாம் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் '12 பி' படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஷாம். அதைத்தொடர்ந்து 'இயற்கை', '6 மெழுகுவர்த்திகள்' உள்ளிட்டப் படங்களில் நடித்துள்ளார். நடிகர் விஜய்யுடன் அவர் இணைந்து நடித்த 'வாரிசு' திரைப்படம் அவருடைய சினிமா பயணத்தில் கம்பேக்காக அமைந்துள்ளது.

தற்போது ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான விஜய் மில்டன் இயக்கிவரும் புதிய படத்தில் நடித்து வருகிறார் ஷாம். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இதற்கு முன்னதாக விஜய் ஆண்டனி மற்றும் சரத்குமாரை வைத்து விஜய் மில்டன் இயக்கிய 'மழை பிடிக்காத மனிதன்' படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் மில்டன் படத்தை தொடர்ந்து இன்னும் சில முக்கியமான இயக்குநர்களின் படங்களில் நடிப்பதற்காக நடிகர் ஷாமுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in