பார்ட்டியில் போதைப் பொருள்: சிக்கினார் பிரபல நடிகையின் சகோதரர்

பார்ட்டியில் போதைப் பொருள்: சிக்கினார் பிரபல நடிகையின் சகோதரர்

பார்ட்டியில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக பிரபல நடிகையின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல இந்தி நடிகர் சித்தாந்த் கபூர். இவர் மூத்த பாலிவுட் நடிகர் சக்தி கபூரின் மகன். நடிகை ஷ்ரத்தா கபூரின் சகோதரர். பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நேற்று பிரம்மாண்ட பார்ட்டி நடப்பதாகவும் அங்கு போதைப் பொருள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து அதிகாலை வரை நடந்த அந்த பார்ட்டிக்கு சென்ற போலீஸார் சோதனை நடத்தினர். அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவர்கள் போதைப் பொருள் பயன்படுத்தி இருந்தது தெரியவந்தது.

சித்தாந்த் கபூர் உட்பட ஆறு பேரையும் கைது செய்த போலீஸார் பெங்களூரு அல்சூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மேலும் விசாரணை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in