‘இதைப் பார்க்க பாலுமகேந்திரா சார் இல்லையே என்பது வருத்தம்!’

இயக்குநர், நடிகர் சசிக்குமார் ’எக்ஸ்ளூசிவ்’ பேட்டி
‘இதைப் பார்க்க பாலுமகேந்திரா சார் இல்லையே என்பது வருத்தம்!’

’சுப்ரமணியபுரம்’, ‘நாடோடிகள்’ படங்களின் வரிசையில் மீண்டும் ஒரு கிராமத்துக் கதை, ஜல்லிக்கட்டு பின்னணியோடு ‘காரி’ படத்துடன் வந்திருக்கிறார் நடிகர் சசிகுமார்.

’காரி’ படம் குறித்தும், தனது சினிமா பயணத்தில் மறக்க முடியாத நினைவுகள் குறித்தும் பல விஷயங்களை ‘காமதேனு’ இணையதளத்திற்காகப் பகிர்ந்துகொண்டார் சசிகுமார்.

“இயக்குநர் பாலுமகேந்திரா அவர்களைப் பார்த்து நாங்கள் சினிமா கற்றுக்கொண்டோம். அவர் படங்களைப் பார்த்துதான் பாலா, அமீர், நான் என வழிவழியாக வந்தோம். அவர் நடித்திருந்த ‘தலைமுறைகள்’ படத்தை நான் தயாரித்ததில் மிக்க மகிழ்ச்சி.

அவர் தன்னுடையத் தொப்பியைக் கழற்றிவிட்டு அந்தப் படத்தில் நடித்திருப்பார். அந்தப் படம் தேசிய விருது வாங்கியது. ஆனால், அந்த தேசிய விருது வாங்கியபோது அதைப் பார்க்க அவர் உயிரோடு இல்லை என்பது வருத்தத்திற்குரிய ஒன்று. அவர் இருந்திருந்தால் அதைப் பார்த்து இன்னும் சந்தோஷப்பட்டிருப்பார்” என்று இந்தப் பேட்டியில் சசிகுமார் கூறியிருக்கிறார்.

இளையராஜாவின் இசை குறித்துப் பேசிய சசிகுமார், “நான் தயாரித்த ‘தலைமுறைகள்’ படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். ராஜா சார் பாடல்களை என்னுடைய ‘சுப்ரமணியபுரம்’ படத்திலேயே வைத்திருப்பேன். அவருடைய பாடல்களையும் கேட்டுத்தான் வளர்ந்திருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார். ‘பேட்ட’ படத்தில் நடிகர் ரஜினிகாந்த்துடன் நடித்தது, ‘வாரிசு’ பட தெலுங்கு வெளியீட்டில் நடப்பது, பான் இந்திய படங்கள் ட்ரெண்ட், ‘காரி’ படம் குறித்து எனப் பல விஷயங்களைப் சுவாரசியமான தகவல்களை இந்தப் பேட்டியில் அவர் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in